• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

“புதன் ஏன் இப்படி இருக்கிறது?” – விளக்க முடியாத ஒரு சூரிய மண்டல மர்மம்

Byadmin

Feb 7, 2026


புதன், சூரிய மண்டலம், விண்வெளி, பூமி, சூரியன்

பட மூலாதாரம், NASA

புதன் கோளை ஒருமுறை பார்த்தால், அது சூரிய மண்டலத்திலேயே மிகவும் சலிப்பூட்டும் கோள் என்று தோன்றலாம். அதன் வறண்ட மேற்பரப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மிகக் குறைவு, அதன் கடந்த காலத்தில் நீர் இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை, மேலும் கோளின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. அதன் கரடுமுரடான பள்ளங்களுக்கு இடையே உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை.

இருப்பினும், உற்று நோக்கினால், புதன் ஒரு வசீகரிக்கும், சாத்தியமற்ற மற்றும் மர்மங்கள் நிறைந்த உலகமாகத் தெரிகிறது.

நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள இந்தக் கோளின் இருப்பு குறித்து கோள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். இது பூமியை விட 20 மடங்கு குறைவான நிறை கொண்டது மற்றும் அகலத்தில் ஆஸ்திரேலியாவை விடச் சற்றே பெரியது. ஆனால், புதன் நமது சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக அடர்த்தி கொண்ட கோளாக உள்ளது. அதன் நிறையின் பெரும்பகுதிக்குக் காரணமாக விளங்குவது அதன் மிகப்பெரிய உலோக உட்கரு ஆகும்.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதனின் சுற்றுப்பாதை, வானியலாளர்களால் முழுமையாக விளக்க முடியாத ஒரு அரிய இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியுடன் தொடர்புடையது: புதன் எவ்வாறு உருவானது என்பது குறித்து நமக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவரை, அத்தகைய ஒரு கோள் அங்கு இருக்கவே முடியாது.

புதன் எங்கிருந்து வந்தது, எப்படி உருவானது மற்றும் அது ஏன் இன்று இப்படி இருக்கிறது என்பது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகும். இருப்பினும், இதற்கான சில விடைகள் விரைவில் கிடைக்கக்கூடும்.

By admin