• Wed. Apr 2nd, 2025

24×7 Live News

Apdin News

புதினை முன்பு பாரட்டிய டிரம்ப் தற்போது கடுங்கோபத்தில் இருப்பது ஏன்?

Byadmin

Apr 1, 2025


டிரம்ப், புதின், யுக்ரேன், போர் நிறுத்தம், ரஷ்யா, பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதினைப் பற்றிப் பேசும்போது, ரஷ்ய அரசுக்கு தனது கோபம் தெரியும் என்றும், அதோடு ரஷ்யத் தலைவருடன் தனக்கு “மிக நல்ல உறவு” இருப்பதாகவும், “அவர் சரியானதைச் செய்தால் இந்தக் கோபம் விரைவாகக் போய்விடும்” என்றும் டிரம்ப் கூறினார்.

யுக்ரேனில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் வாரக்கணக்கில் ஈடுபட்டபிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது தான் ‘கடுங்கோபத்திலும்’ ‘எரிச்சலிலும்’ இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியின் நம்பகத்தன்மை குறித்து கடுமையாக பேசி வரும் ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 50% வரி விதிக்கப்படும் என மிரட்டியுள்ளார். என்பிசி செய்திகளுக்கு அளித்த நேர்காணலின் போது டிரம்ப் இக்கருத்தை தெரிவித்தார்.

புதிய தேர்தலை நடத்த ஐக்கிய நாடுகள் சபை அரசை நிறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கடந்த வாரம் பேசிய புதின், அதன் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என கூறினார்.

புதின் மீதான தொனியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை டிரம்பின் இந்த கருத்துக்கள் காட்டுகின்றன. கடந்த ஆறு வாரங்களில், பல்வேறு சலுகைகள் செய்யச் சொல்லி ஸெலன்ஸ்கியை கடுமையாக வலியுறுத்தி வந்தார் டிரம்ப்

By admin