6
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் தலையீட்டுடன் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தன.
இதற்கிடையில், ரஷியா உக்ரைன் தலையீட்டில், அதிபர் வ்லாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தை குறிவைத்து டிரோன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது, டிசெம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில், நோவ்கோரோட் பகுதியில் புதினின் இல்லத்தை நோக்கி, உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியதாகும். இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அனைத்து டிரோன்களையும் வீழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
லாவ்ரோவ், இதனை அரச பயங்கரவாதம் எனக் கூறி, இதற்குப் பதிலடி வழங்கப்படும் என்றும், நடப்பில் இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் மீண்டும் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஷிய அதிபர் புதின் அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடி, பேச்சுவார்த்தை நடந்து கொண்ட வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நிகழ்வது பேச்சுவார்த்தையை பாதிக்கும் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலாக, உக்ரைன் அதிபர் வோலோடிய்மிர் ஜெலென்ஸ்கி ரஷியாவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தார். அவர், இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், ரஷியா கீவ் மீது தாக்குதல் நடத்த காரணத்தை உருவாக்கவே இத்தகைய நாடகங்களை ஆடுவதாகவும், பதிலடி அளித்துள்ளார்.
புதின் இல்லத்தை குறிவைத்து நடைபெற்ற இந்த தாக்குதல், போர் நிறுத்த முயற்சிகளுக்கு தற்போது பெரும் தடையாக அமைந்துள்ளது.