• Fri. Aug 29th, 2025

24×7 Live News

Apdin News

புதின், கிம்முக்கு சீனா அழைப்பு: அமெரிக்காவுக்கு ஜின்பிங் சொல்ல விரும்பும் சேதி என்ன?

Byadmin

Aug 29, 2025


சீனா, ரஷ்யா, வடகொரியா, ஜின்பிங் - புதின் - கிம், டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, சீன செய்தியாளர், பிபிசி நியூஸ்

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும்.

இது ஷி ஜின்பிங்கிற்கு ஒரு முக்கியமான ராஜதந்திர வெற்றியாகவும் அமையும்.

சீன அதிபர் நீண்ட காலமாக உலகிற்கு பெய்ஜிங்கின் வலிமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் தன்னை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமின்றி, வலுவான ராஜதந்திரியாகவும் நிறுவிக்கொள்ள விரும்புகிறார்.

டிரம்பின் வரிக்குவரி யுத்தம் உலகம் முழுவதும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா ஒரு நிலையான வர்த்தகப் பங்காளி என்று அவர் முன்வைக்கிறார்.

By admin