• Mon. Dec 8th, 2025

24×7 Live News

Apdin News

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ – மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

Byadmin

Dec 7, 2025


புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார்.

இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

By admin