• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

புதிய அரசமைப்பு எப்போது வரும் என்று இப்போது கூற முடியாதாம்!

Byadmin

Apr 3, 2025


“புதிய அரசமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாகக் குறிப்பிட முடியாது. ஆனால், ஐந்தாண்டு காலப் பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது புதிய அரசமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எல்லா விடயங்களையும் ஆறு மாத காலத்துக்குள் செய்ய முடியாது. அதனால்தான் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கப்படுகின்றது. புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணியை ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியதில்லை. நல்லாட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு நகல் உள்ளது. மேலும் பல அறிக்கைகளும் உள்ளன.

கால எல்லை பற்றி கேட்டால் என்னால் பதில் வழங்க முடியாது. ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட புதிய அரசமைப்பு ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் கொண்டுவரப்படும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். குறித்த முறைமையைத் தக்க வைப்பது தொடர்பில் எவ்வித பேச்சும் எமது தரப்பில் நடக்கவில்லை.” – என்றார்.

By admin