• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

புதிய சாதனை படைத்த‘எல்லாம் அவன் செயல்’ நடிகர் ஆர்.கே

Byadmin

Apr 4, 2025


‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக தமிழ் இரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்.கே (ராதாகிருஷ்ணன்). நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.

கடந்த 15 வருடங்களாக விஐபி என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், அந்த நிறுவனத்தின் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக, மனிதனின் முக்கிய பிரச்சினையான குறட்டைக்கு இவரது நிறுவனம் தீர்வு கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆர்கேவின் சாதனைகளை பாராட்டி உலகளவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ விருது, ஆச்சே சுல்தானகம் மன்னர் கைகளால் வழங்கப்பட்டது.

மேலும் ஆர்கேவை சிறப்பிக்கும் விதமாக கிட்டத்தட்ட 400 வருடங்கள் பழைமை வாய்ந்த இரண்டு வாள்களையும் அந்த நாட்டின் நினைவுச் சின்னமாக இந்தோனேஷியாவை சேர்ந்த ஆச்சே சுல்தானகம் மன்னர், ஆர்கேவுக்கு தன் கையால் பரிசளித்துள்ளார்.

இந்த விருது நிகழ்வில், குறித்து நடிகர் ஆர்.கே பேசும்போது,

“வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியமல்ல. நமது கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன் தரவேண்டும் என நான் நினைக்கிறேன். பழைமை வாய்ந்த இரண்டு வாள்களை எனக்கு பரிசாகத் தந்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்றார்.

ஆர்கேவின் இந்த சாதனையை திரைத்துறையை சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

By admin