• Tue. Apr 22nd, 2025

24×7 Live News

Apdin News

புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?

Byadmin

Apr 21, 2025


போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Getty Images

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.

தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பல நூறாண்டு காலமாக அமலில் இருக்கும் மிகவும் ரகசியமான தேர்தல் நடைமுறையின் கீழ், கார்டினல்கள் என்று அழைக்கப்படும் மூத்த மதகுருமார்கள், புதிய போப்பை தேர்வு செய்வார்கள்.

போப்பின் பணி என்ன?

போப் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஆவார். ரோமன் கத்தோலிக்கர்கள் அவர் இயேசு கிறிஸ்துவின் நேரடி வாரிசாகக் கருதுகின்றனர்.

By admin