• Fri. May 9th, 2025

24×7 Live News

Apdin News

புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட்டிற்கு இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து

Byadmin

May 9, 2025


புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பேராயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட்டிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர்,இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டாமர் போப் லியோவின் நியமனம் கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் ஆனந்தமான செய்தி என்று வாழ்த்துக் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவரது நியமனம் அமெரிக்காவுக்கு பெரும் கௌரவம் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் போப் லியோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். போப் லியோ தம்மைப் போலவே ஒரு சிக்காகோ வாசி என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி : அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுப்பு!

வத்திக்கானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பும் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

அதேவேளை, உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, போப் லியோவின் கீழ் வத்திக்கான் தமது நாட்டுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, போப் லியோவின் தலைமைத்துவம் உலகில் அமைதியை நிலைநாட்ட மிகவும் முக்கியம் என்று கூறினார்.

ஜெர்மானியப் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ், இந்தச் சவால்மிக்க காலக்கட்டத்தில் போப் லியோ கத்தோலிக்கச் சமயத்தினருக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் வழங்க முடியும் என்று கூறினார்.

ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் உலகெங்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்க போப் லியோ உதவ முடியும் என்று கூறினார்.

புதிய போப்புதிய போப்

By admin