• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை | சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

Byadmin

Nov 6, 2025


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் இன்று புதன்கிழமை (05) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு  மேற்கொண்டனன்.

இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாகவும், இச்சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

By admin