• Wed. Jan 22nd, 2025

24×7 Live News

Apdin News

புதுக்கோட்டை: கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த நபர் லாரி மோதி மரணம் – நடந்தது என்ன?

Byadmin

Jan 21, 2025


புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் மரணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக பேட்டி கொடுத்த அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெகபர் அலி என்பவர் லாரி மோதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு 5 பேரில் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

யார் இந்த ஜெகபர் அலி?

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி (58). இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும், அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திருமயம், வெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கல் குவாரிகள், சாலை பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்துள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.



By admin