• Tue. May 6th, 2025

24×7 Live News

Apdin News

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து – இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

Byadmin

May 6, 2025


புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?
படக்குறிப்பு, காவல்துறை ரோந்து ஜீப், அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. 22 பேர் காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு சமுதயாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்டதில் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டதோடு, காவல்துறை ரோந்து ஜீப் மற்றும் அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டன. 22 பேர் காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த மோதல் தொடர்பாக இரு சமுதாயத்தைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் வடகாடு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா நேற்று (மே 5) மாலை தொடங்கி இரவு முடிவடைந்தது.

தேரோட்டத் திருவிழா முடிந்து இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

By admin