• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை முற்றுகையிட்ட மகளிர் காங்கிரஸார்! | Congress Women Team Siege Resto Bars at Puducherry

Byadmin

Aug 11, 2025


புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் அதன் ஊழியரால் சென்னை கல்லூரி மாணவர் குத்தி கொல்லப்பட்டார். மற்றொரு மாணவர் பலத்த காயமடைந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், வழிபாட்டுதலங்கள் அருகே உள்ள ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்டோர் நேருவீதி-காந்தி வீதி சந்திப்பில் இருந்து வாயில் கருப்புத்துணி கட்டி பேரணியாக வந்து நேருவீதி – மிஷன்வீதி சந்திப்பில் உள்ள ரெஸ்டோ பாரை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் அதே வீதியில் உள்ள மற்றொரு ரெஸ்டோ பாரை முற்றுகையிட்டு அங்கிருந்த பேனரை கிழித்து எறிந்தனர். பின்னர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ரெஸ்டோ பார்களை மூட வலியுறுத்தினர். போலீஸார் அங்கும் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



By admin