• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

புதுச்சேரி அரசியல் தமிழகத்தை விட எந்த வகையில் மாறுபட்டு நிற்கிறது? 4 முக்கிய விஷயங்கள்

Byadmin

Apr 7, 2026


புதுச்சேரியில் பிராசரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோதி. வலது நமச்சிவாயம்

பட மூலாதாரம், X/Narendramodi

படக்குறிப்பு, புதுச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோதி.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது.

சிலருக்கு தக்க வைப்பதற்கான போராட்டம் என்றால், வேறு சிலருக்கு அரசியல் இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டுடன் ஒரே நாளில் வாக்குப்பதிவை சந்தித்து வந்த புதுச்சேரியில், இந்த முறை தமிழ்நாட்டை விட சற்று முன்னதாகவே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல், இந்த தேர்தலில் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது பல்வேறு மாறுபட்ட அம்சங்கள் புதுச்சேரியில் காணப்படுகின்றன. அவற்றில் 4 முக்கிய விஷயங்கள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

முதல் பாஜக கூட்டணி ஆட்சி

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு 2021ஆம் ஆண்டு அமைந்தது.

By admin