• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் – ஆளுநரிடம் பிரதமர் மோடி உறுதி  | Modi assures Governor that the Centre will support Puducherry development

Byadmin

Apr 14, 2025


புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று துணைநிலை ஆளுநரிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக புதுதில்லி சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதி உதவியோடு தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

பாரதப் பிரதமரின் நலத்திட்டங்கள் தகுதியுடைய பயனாளிகளுக்கு சென்றடைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் துணைநிலை ஆளுநர் எடுத்துரைத்தார். விவரங்களை கேட்டறிந்த பாரதப் பிரதமர் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.



By admin