இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது. உலகச் சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் அளவைவிட நேற்றைய தினம் (17) காற்று மாசு 57 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
நகர் முழுவதையும் சாம்பல் நிறப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. இப்புகைமூட்டம் காரணமாக பாடசாலைகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக இணையத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
பிள்ளைகள் வீட்டில் இருந்தால் போக்குவரத்து குறையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
காற்றில் PM2.5 அளவிலான தூய்மைக்கேட்டுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை நுரையீரல் வாயிலாக இரத்தத்தைச் சென்றடைந்து புற்றுநோயை ஏற்படுத்தும் துகள்கள் ஆகும்.
புற்றுநோய் அபாயமும் பரிந்துரைக்கப்படும் அளவைவிட இன்று (18) அது 39 மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
விவசாயிகள் பயிர்களை எரிப்பது, தொழிற்சாலைகள் மற்றும் நெரிசல் மிகுந்த போக்குவரத்துக் காரணமாக ஏற்படும் நச்சுவாயு ஆகியவற்றால் ஒவ்வோர் ஆண்டும் புதுடில்லியில் கடும் புகைமூட்டம் ஏற்படுகிறது.
The post புதுடில்லியில் காற்று மாசு அதிகரிப்பு; துகள்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்! appeared first on Vanakkam London.