• Tue. Nov 11th, 2025

24×7 Live News

Apdin News

புதுடெல்லி குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

Byadmin

Nov 11, 2025


இந்தியா – புதுடெல்லி, வரலாற்று புகழ்வாய்ந்த செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட காரில் குண்டுவெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

நேற்றிரவு (10) இடம்பெற்ற இந்தக் குண்டுவெடிப்புச் சம்வம் தற்கொலை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் என டெல்லி பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட “வெள்ளை காலர்” (white collar) பயங்கரவாத குழுவுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக வெளியிடப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த கார், தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த ஒரு வைத்தியருக்குச் சொந்தமானது என்றும், அவர் பயங்கரவாத குழுவின் ஒரு பகுதியாக இருந்தார் என்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் வட்டாரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், இந்த டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபர், குறித்த முதல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு (Red Fort) அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் white Hyundai i20 காரின் உரிமையாளர் ஆவார்.

இந்தக் குண்டுவெடிப்பில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி வைத்துள்ளார்.

சந்தேகிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியான டாக்டர் உமர் முகமதுவின் முதல் படத்தை NDTV வெளியிட்டுள்ளது.

9 பேர் கொல்லப்பட்ட புதுடெல்லி குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்9 பேர் கொல்லப்பட்ட புதுடெல்லி குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

இந்த இரண்டு மருத்துவர்களும் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா பொலிஸாரால் தகர்க்கப்பட்ட “வெள்ளைக் காலர்” பயங்கரவாத அமைப்பில் திங்களன்று கைது செய்யப்பட்டனர். தனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதை அறிந்த பிறகு, டாக்டர் உமர் ஃபரிதாபாத்தில் இருந்து தப்பிச் சென்றார். அவர் பீதியடைந்து குண்டுவெடிப்பைத் தூண்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை உமர், மேலும் இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டார் என்றும், அந்தக் காரில் ஒரு டெட்னேட்டரை (detonator) பொருத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By admin