• Sat. Mar 15th, 2025

24×7 Live News

Apdin News

புத்தகயா: மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து – பௌத்தர் இருதரப்பு மோதல் பற்றிய பிபிசி கள ஆய்வு

Byadmin

Mar 11, 2025


புத்தகயா கோவில், இந்து - பௌத்தர்

பட மூலாதாரம், AKASH LAMA

படக்குறிப்பு, பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் அம்பேத்கரின் புகைப்படமும், சில இடங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலும் காணப்படுகின்றன.

பிகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த தலமான புத்த கயாவில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பௌத்த துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கை என்னவென்றால், பிடி (BT) சட்டம் அதாவது புத்தகயா கோவில் சட்டம், 1949 ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் புத்த கயா கோவில் மேலாண்மைக் குழுவில் (பிடிஎம்சி) பௌத்தர்களையும் இந்துகளையும் உறுப்பினர்களாக ஆக்குவதற்கான ஒரு விதி உள்ளது, இதை பௌத்த பிக்குகள் நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றனர்.

முன்னதாக மகாபோதி கோவிலுக்கு அருகில் பௌத்த பிக்குகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் பிப்ரவரி 27 அன்று நிர்வாகம் அவர்களை மகாபோதி கோவில் வளாகத்திலிருந்து அகற்றியது.

By admin