நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு நகரத்தின் வடக்கே, இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது ‘புத்தநில்கந்தா திருக்கோவில்’. மகாவிஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தை, கி.பி. 6-ம் நூற்றாண்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கின் ஆரம்ப கால அரசரான விஷ்ணு குப்தா என்பவர் கட்டமைத்துள்ளார்.
இங்கு பல தலைகளைக் கொண்ட ஆதிசேஷனின் படுக்கை மீது, மகா விஷ்ணு படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் 16 அடி நீள சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை, பசால்ட் என்ற வகை பாறையில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்தக் கல் சிற்பம் 42 அடி நீளம் கொண்டது. குளத்தில் நீர் நிரம்பி இருக்கும்போது, இந்த சிலையானது, நீரின் மீது மிதப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.