• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

புத்தாண்டு தினம் 2025: உலகின் முக்கிய நகரங்களில் நிகழ்ந்த கொண்டாட்டங்கள்- புத்தாண்டை உலகம் வரவேற்றது எப்படி?

Byadmin

Jan 1, 2025


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

உலகம் 2024-ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, வாணவேடிக்கைகள், வண்ண ஒளி நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் 2025-ஆம் ஆண்டை வரவேற்றது.

பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இங்கே காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
துபாயின் புகழ்பெற்ற 'புர்ஜ் கலிஃபா'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புத்தாண்டை வரவேற்கும் விதமாக துபாயின் புகழ்பெற்ற ‘புர்ஜ் கலிஃபா’ கட்டடத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சி.ஜி சாலையில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சி.ஜி சாலையில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த மக்கள்.
கேட்வே ஆஃப் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பையின் ‘கேட்வே ஆஃப் இந்தியாவில்’ புத்தாண்டைக் கொண்டாட மக்கள் ஒன்றுகூடுவது வழக்கமான ஒரு நிகழ்வு. இம்முறையும் அதுபோல மக்கள் கூடியதைக் காண முடிந்தது.
இந்தோனேசியா

பட மூலாதாரம், SONNY TUMBELAKA/AFP

படக்குறிப்பு, இந்தோனீசியாவின் பாலியில், ‘2024ஆம் ஆண்டின் சூரியனை விடுவித்துவிட்டு, 2025ஆம் ஆண்டின் சூரியனை வரவேற்கும்’ விதமாக நடனமாடி, புத்தாண்டை வரவேற்கும் நடனக் கலைஞர்கள்.
ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள்

பட மூலாதாரம், Bianca De Marchi/AAP Image via REUTERS

படக்குறிப்பு, நள்ளிரவுக்கு (12 மணி) மூன்று மணி நேரத்திற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள்.
ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Bianca De Marchi/AAP Image via REUTERS

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில், புத்தாண்டு வாணவேடிக்கைகளை காண வேண்டும் என்பதற்காக சிட்னி நகரில் குடும்பத்துடன் முகாமிட்ட மக்கள்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பாலம்

பட மூலாதாரம், SAEED KHAN/AFP

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பாலம் பகுதியில் நள்ளிரவில், புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட வாணவேடிக்கைகள். அங்கு பொறுமையாக கூடியிருந்த மக்களுக்கு கண்கவர் விருந்தாக இது அமைந்தது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ்

பட மூலாதாரம், Brook Mitchell/Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் பகுதியில் வாணவேடிக்கைகளை காண குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்.
ஷி ஜின்பிங் உரை

பட மூலாதாரம், ADEK BERRY/AFP

படக்குறிப்பு, சீனாவின் பெய்ஜிங்கில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் உரை நிகழ்த்தினார்.
சீனாவின் ஜிலின் நகரில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளைக் காண, அங்குள்ள சோங்குவா ஆற்றுப் பகுதியில் குவிந்த சீன மக்கள்.

பட மூலாதாரம், VCG via Getty Images

படக்குறிப்பு, சீனாவின் ஜிலின் நகரில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளைக் காண குவிந்த சீன மக்கள்.
சீனாவின் சாங்கிங்

பட மூலாதாரம், Cheng Xin/Getty Images

படக்குறிப்பு, சீனாவின் சாங்கிங் நகரின் ஜீஃபாங்பே நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் புத்தாண்டை கொண்டாட திரண்ட மக்கள்.
தாய்லாந்து

பட மூலாதாரம், RUNGROJ YONGRIT/EPA

படக்குறிப்பு, தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள ‘சிட்டி பில்லர் ஆலயத்தில்’ புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள பௌத்த பக்தர் ஒருவர்.
தைவானின் 'தைபே 101 கோபுரப்' பகுதி

பட மூலாதாரம், RITCHIE B TONGO/EPA

படக்குறிப்பு, தாய்வானின் ‘தைபே 101 கோபுரத்தில்’ நடந்த வாணவேடிக்கைகளை காண கூடியிருந்த கூட்டத்தை புகைப்படம் எடுக்கும் ஒரு நபர்.
தைவானின் 'தைபே 101 கோபுரப்' பகுதி

பட மூலாதாரம், Daniel Ceng/Anadolu via Getty Images

படக்குறிப்பு, தாய்வானின் ‘தைபே 101 கோபுரப்’ பகுதியில், புத்தாண்டு பிறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பாக ‘கவுண்ட் டவுன்’ தொடங்கியபோது, அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் ‘ஸ்மார்ட்போன் டார்ச் ஒளியை’ உயர்த்திக் காட்டியபோது.
தைவானின் 'தைபே 101 கோபுரப்' பகுதி

பட மூலாதாரம், Gene Wang/Getty Images

படக்குறிப்பு, 508 மீட்டர் உயர ‘தைபே 101 கோபுரத்தில்’ நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை.
ஜப்பானில் புத்தாண்டு

பட மூலாதாரம், Rodrigo Reyes Marin/ZUMA Press Wire/REX/Shutterstock

படக்குறிப்பு, ஜனவரி 1, ஜப்பானில் ஒரு முக்கியமான தேசிய விடுமுறை தினம். புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு வீடுகள் மற்றும் கோயில்கள் ஜனவரி 1 அன்று சுத்தம் செய்யப்படுகின்றன.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள போசிங்கக் பெவிலியனின் மணி

பட மூலாதாரம், Jung Yeon-je/AFP

படக்குறிப்பு, புத்தாண்டு பிறந்ததும், தென் கொரியாவின் தலைநகர் சோலில் உள்ள போசிங்கக் பெவிலியனின் மணி அடிக்கப்பட்டது. டிசம்பர் 29 அன்று நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, தென் கொரியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மந்தமாகவே இருந்தன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா

பட மூலாதாரம், Eloisa Lopez/REUTERS

படக்குறிப்பு, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் நகர மையத்தில் புத்தாண்டை வரவேற்க நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சி.
இந்தோனேசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் காண நள்ளிரவில் கூடிய மக்கள்
சிரியா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சிரியாவில், பல ஆண்டுகளாக நிலவிய அசாத்-குடும்ப ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கொண்டாடப்பட்ட முதல் புத்தாண்டு இதுவாகும். தலைநகர் டமாஸ்கஸில் நடைபெற்ற வாணவேடிக்கைகள்.
இராக் தலைநகர் பாக்தாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இராக் தலைநகர் பாக்தாத்தில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin