• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

புனித தீவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘புன்னகைக்கும்’ புதைபடிவம் என்ன தெரியுமா?

Byadmin

Feb 21, 2026


புனிதத் தீவு, புதைபடிவம், நார்தம்பர்லேண்ட்

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

நார்தம்பர்லேண்டில் உள்ள புனிதத் தீவில் ‘பாக்சிங் டே’ நடைபயணத்தின்போது 64 வயதான கிறிஸ்டின் கிளார்க் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது.

“ஒரு சிறிய கூழாங்கல் என்னைப் பார்த்து ‘புன்னகைப்பது’ போல் இருந்தது. அது ஒருவரின் செயற்கைப் பல் வரிசையைப் போலவே இருந்தது” என்றார் அவர்.

அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று, புதைபடிவங்களைக் கண்டறியும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிட்டார். அதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகள் வந்து குவிந்தன. அதன் பிறகு, அது உண்மையில் ஒரு பண்டைய கடல்வாழ் உயிரினத்தின் படிவம்தான் என்பதை மற்றவர்களும் உறுதிப்படுத்தினர்.

கிறிஸ்டின் ஒவ்வோர் ஆண்டும் தனது கணவர் ஜெரார்டுடன் நார்தம்பர்லேண்ட் பகுதிக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அங்குள்ள புனிதத் தீவில் தாங்கள் வழக்கமாக கட்டி’ஸ் பீட்ஸ் (Cuddy’s beads) எனப்படும் ஒருவகை மணிகளை தேடிச் செல்வதாக அவர் கூறினார்.

சுமார் 150 பேர் மட்டுமே வசிக்கும் இந்த நிலப்பகுதி, ஒரு நாளைக்கு இரண்டு முறை கடல் நீரால் பிரிக்கப்படுகிறது. இது ஆரம்பக்கால ஆங்கிலேய கிறிஸ்தவத்தின் தொட்டில் எனக் கருதப்படுகிறது.

By admin