1
புனித வெள்ளி பிரார்த்தனையில் நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வரும் போப் பிரான்சிஸ் கலந்துகொள்ளவில்லை
ரோமின் கொலசியத்தில் நேற்று நடந்த அந்தப் பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டனர்
இதேவேளை, புனித வெள்ளி பிரார்த்தனையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் போப் பங்கேற்கவில்லை.
2013ஆம் ஆண்டிலிருந்து போப்பாக இருந்துவரும் பிரான்சிஸ், 5 வாரங்களாக நிமோனியா நோய்த்தொற்றுடன் போராடியதுடன், தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் படிப்படியாக நோயிலிருந்து குணமடைந்து வருகிறார்.
இந்த நிலையில், வாரயிறுதியில் நடக்கவிருக்கும் ஈஸ்டர் பிரார்த்தனையில் போப் கலந்துகொள்வாரா என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.