• Fri. Nov 8th, 2024

24×7 Live News

Apdin News

புர்கினா பாசோ: நாட்டின் தலைநகரில் குப்பைகளை சுத்தம் செய்ய களமிறங்கிய மக்கள்

Byadmin

Nov 8, 2024


காணொளிக் குறிப்பு, வாகடூகுவை சுத்தம்செய்ய தன்னார்வலர்களுக்கு உதவுகிறார் சமூக அமைப்பாளர் மஹாமடி குவேட்ராகோ

நாட்டின் தலைநகரில் குப்பைகளை சுத்தம் செய்ய களமிறங்கிய மக்கள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவின் தலைநகர் வாகடூகுவை சுத்தம் செய்ய தன்னார்வலர்களுக்கு உதவுகிறார் சமூக அமைப்பாளர் மஹாமடி குவேட்ராகோ.

இது குறித்து பேசிய மஹாமடி குவேட்ராகோ, “பல இடங்களில் திடக்கழிவுகளை மக்கள் குப்பையாக கொட்டுவதைப் பார்த்தோம். குறிப்பாக ஒரு நீர்த்தேக்கத்திற்கு அருகில் குப்பைகளைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “மனித வாழ்க்கையில், தண்ணீரின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம். எனவே இந்த இடத்தை அழகாக மாற்றவும், தலைநகரை சுத்தமாக வைத்துக்கொள்வதில் எல்லோருக்கும் பங்குள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தவும் என்ன செய்யலாம் என யோசித்து, பின்னர் குழுவாக குப்பைகளை அகற்ற முடிவு செய்தோம்” என்று கூறினார்.

இவ்வாறு தன்னார்வல குழுக்களால் சேகரிக்கப்படும் குப்பைகள், மறுசுழற்சிக்காக அரசு தளங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

புர்கினா பாசோ நாடு முழுவதும் இதை செயல்படுத்துவதே மஹாமடியின் திட்டம்.

“எங்கள் பணி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பார்த்து இளைஞர்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தம் செய்ய முன்வருகிறார்கள்.” என்கிறார் மஹாமடி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin