• Fri. Dec 12th, 2025

24×7 Live News

Apdin News

புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் 14 நாடுகளில் பிறந்த 200 குழந்தைகளுக்கு என்ன ஆனது?

Byadmin

Dec 11, 2025



புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுவை கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள்

பட மூலாதாரம், Shutterstock

படக்குறிப்பு, கோப்புப்படம்

உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு குறைபாடு தனக்கு இருப்பது பற்றி தெரியாமல், உயிரணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது

இந்த தானதாரரிடமிருந்து பிறந்த சில குழந்தைகள் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர். இந்த மரபணு குறைபாட்டை பெற்ற குழந்தைகளில் வெகு சிலரே வாழ்க்கையில் புற்றுநோய் வராமல் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த உயிரணு பிரிட்டன் மருத்துவமனைகளுக்கு விற்கப்படவில்லை. ஆனால், சில பிரிட்டிஷ் குடும்பங்கள் (அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது) டென்மார்க்கில் கருத்தரிப்பு சிகிச்சை எடுத்தபோது அந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட தானத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை விற்ற டென்மார்க்கின் ஐரோப்பிய உயிரணு வங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்கள் “ஆழ்ந்த அனுதாபங்களைத்” தெரிவித்ததுடன், சில நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற இந்த தானம் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டது.

புற்றுநோய் ஏற்படுத்தும் மரபணுவை கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது?

பட மூலாதாரம், Getty Images

17 ஆண்டுகளாக தானம்

இந்த ஆய்வு, பிபிசி உட்பட 14 பொதுச் சேவை ஒளிபரப்பாளர்களால், ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியத்தின் புலனாய்வு இதழியல் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுள்ளது.

By admin