• Mon. Jan 20th, 2025

24×7 Live News

Apdin News

புலிகளை செல்லப் பிராணியாகக் கொடுக்க பரிந்துரைக்கும் நேபாள பிரதமர் – ஏன்?

Byadmin

Jan 20, 2025


காட்டில் வாழும் புலிகளை செல்லப் பிராணியாகக் கொடுக்க பரிந்துரைக்கும் நேபாள பிரதமர் – ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக நேபாளம் உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, நேபாளம் அளவை மீறிய வெற்றியை அடைந்திருக்கலாம் என்று கருதுகிறார்.

“இவ்வளவு சிறிய நாட்டில், எங்களிடம் 350க்கும் அதிகமான புலிகள் உள்ளன. இவ்வளவு புலிகளை வைத்துக்கொண்டு, அவை மனிதர்களைச் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று அனுமதிக்க முடியாது,” என்று 29வது காலநிலை உச்சிமாநாடு முடிவுகளால் நாட்டில் ஏற்படும் தாக்கம் குறித்து மதிப்பாய்வதற்காக கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் கே.பி.ஷர்மா ஒலி கூறினார்.

அரசாங்க தரவுகளின்படி, 2019 மற்றும் 2023க்கு இடையில் புலிகளின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 40 பேர் பலியாகியுள்ளனர், 15 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், உள்ளூர் சமூகங்கள் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன.

“எங்களுக்கு 150 புலிகள் போதும்” என்று பிரதமர் ஒலி டிசம்பரில் அறிவித்தார். அதோடு, நேபாளம் அதன் மதிப்புமிக்க புலிகளை மற்ற நாடுகளுக்குப் பரிசாக அனுப்பலாம் என்றுகூடப் பரிந்துரைத்தார்.



By admin