• Wed. Jun 25th, 2025

24×7 Live News

Apdin News

புலி அல்லது சிறுத்தை மனிதரை எப்போது தாக்கும்? மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி?

Byadmin

Jun 25, 2025


புலி, சிறுத்தை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை ‘மேன் ஈட்டர்’களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர்.

மனிதன் – காட்டுயிர் மோதல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது.

By admin