0
இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘புல்லட்’ எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த காணொளி… குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புல்லட்’ எனும் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ், எல்வின் , சுனில், வைஷாலி, காளி வெங்கட் ,சிங்கம் புலி, சாம்ஸ், ஆர். சுந்தர்ராஜன், ராமச்சந்திர ராஜு, ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் சிங் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ராகவா லோரன்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த பிரத்யேக காணொளியில் அவர் காவல்துறை உயரதிகாரியாக தோன்றுவது… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.