• Fri. Aug 14th, 2026

24×7 Live News

Apdin News

‘பூணூல், சைவம்-சைவம்’ – அயோத்தி ராமர் கோயில் சி.இ.ஓ பணிக்கான நேர்காணலில் நடந்தது என்ன?

Byadmin

Aug 14, 2026


காணிக்கை திருட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, முழுநேர தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்தது.

பட மூலாதாரம், @ShriRamTeerth

படக்குறிப்பு, காணிக்கை திருட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, முழுநேர தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்தது.

    • எழுதியவர், அர்ஷத் அஃப்சல் கான்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) நேர்காணல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

அதற்காக வந்த 5,585 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வேட்பாளர்களிடம் உயர்மட்டக் குழு ஒன்று நேர்காணல் நடத்தியதாக அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தக் குழு இவர்களில் மூவர் பெயர்களை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும். இறுதி முடிவை அறக்கட்டளையே எடுக்க வேண்டும்.

இந்தத் தேடுதல் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. சதுர்வேதி, அணு விஞ்ஞானி டாக்டர். சுரேஷ் ஹவாரே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மதம் சார்ந்த பணிகளில் அனுபவம், ராமர் மீது நம்பிக்கை மற்றும் இந்து மதத்தின் அடிப்படை மத மரபுகள் தொடர்பான கேள்விகள் நேர்காணலில் கேட்கப்பட்டன. வேட்பாளர்கள் குடுமி வைத்துக் கொள்கிறார்களா, பூணூல் அணிகிறார்களா, முழுமையாக சைவம் சாப்பிடுவோரா அல்லது மாமிசம் சாப்பிடுவார்களா, மது அருந்துகிறார்களா இல்லையா, தீவிர இந்துவா அல்லது இறை நம்பிக்கை மட்டும் கொண்டவரா, இந்து மதத்திற்கு ஏற்ப ஆடை அணிவதில் வசதியாக இருப்பவர்களா, மற்ற மதங்கள் குறித்த அவர்களது கருத்து என்ன என்பன போன்ற கேள்விகளும் நேர்காணலின்போது கேட்கப்பட்டன.

ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, முழு நேர தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க அறக்கட்டளை முடிவு செய்தது.

By admin