• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

பூமிக்கு புதிதாக ‘ஒரு குட்டி நிலவு’ – அரை நிலவு, பேய் நிலவு பற்றி தெரியுமா?

Byadmin

Nov 15, 2026


பூமி, கோள்கள், சிறுகோள்கள், நிலவு

படக்குறிப்பு, பூமியும் வேறு சில கோள்களும் சிறுகோள்களை அவற்றின் சுற்றுப்பாதைகளிலிருந்து ஈர்த்து, தற்காலிக நிலவுகளாக மாற்றிக்கொள்ள முடியும்

வானியலாளர்களின் கூற்றுப்படி, பூமிக்கு ஒரு புதிய ‘குட்டி நிலவு’ கிடைத்துள்ளது.

‘2026 QQ8’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறுகோளை, ஹங்கேரியைச் சேர்ந்த வானியலாளர் கிரிஸ்டியன் சார்னெஸ்கி கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் கண்டறிந்தார். இருப்பினும், சர்வதேச வானியல் ஒன்றியத்தின் சிறுகோள் மையம் கடந்த மாதம்தான் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்தச் சிறுகோள் மிகவும் சிறியது. இதன் விட்டம் சுமார் 1 முதல் 2 மீட்டர் வரை இருக்கும். மேலும், இது பூமியிலிருந்து 5 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ளது. இது நிலவு பூமியிலிருந்து இருக்கும் தொலைவைவிட அதிகம்.

பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, தற்காலிகமாக பூமியைச் சுற்றி வரும் சிறிய சிறுகோள்களே ‘குட்டி நிலவுகள்’ எனப்படுகின்றன.

‘2026 QQ8’ சிறுகோள் கடந்த ஏப்ரல் மாதம் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, அதைச் சுற்றி வரத் தொடங்கியிருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அடுத்த சில மாதங்களில் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, மீண்டும் விண்வெளிக்குச் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By admin