• Sat. Sep 13th, 2025

24×7 Live News

Apdin News

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் ‘சிறுத்தை’ தடத்தில் நாசா தீவிர ஆய்வு

Byadmin

Sep 13, 2025


செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.

    • எழுதியவர், ரெபேக்கா மோரல்
    • பதவி, அறிவியல் ஆசிரியர்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, ‘சிறுத்தை தடம்’ (Leopard Spots) மற்றும் ‘பாப்பி விதைகள்’ (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.

இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.

By admin