0
பூமியின் மிக அதிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, பூமியின் மிக அதிக வெப்பமான ஆண்டாக 2015ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு மிக அதிகரித்த வெப்பம் அதனை முறியடித்துள்ளது.
தொழிலியல் புரட்சி ஏற்பட்ட காலத்துடன் ஒப்புநோக்க உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகியுள்ளது. அவ்வாறு முதல்முறையாக நேர்ந்துள்ளதாக உலகின் சில வானிலை ஆய்வகங்கள் கூறியுள்ளன.
வெப்பம் 1.53 டிகிரி செல்சியஸ் முதல் 1.6 டிகிரி செல்சியஸ் வரை கூடியதாக ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் வானிலை ஆய்வகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பூமியின் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருந்தால், பெரும் பேரிடர்களைத் தவிர்க்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
20 ஆண்டுகள் அடிப்படையில் சராசரி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் வைத்திருக்க உலக நாடுகள் 2015இல் இணங்கின. கடந்த ஓராண்டு மட்டும் அதை மிஞ்சிவிட்டதை எண்ணி ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சராசரி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.