• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

பூமி சுழற்சி தினம்: அதிகரிக்கும் புவியின் சுழற்சி வேகம் – என்ன ஆபத்து?

Byadmin

Jan 9, 2026


பூமி சுழற்சி தினம்: அதிகரிக்கும் புவியின் சுழற்சி வேகம் - என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வதன் வேகம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

இது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல்கூட இருக்கலாம்.

24 மணி நேரத்தை கணக்கிட்டால் ஒரு நாளில் மொத்தமாக 86,400 விநாடிகள் உள்ளன. ஆனால், நேரத்தை அளவிட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஒரு சராசரி நாளின் நீளம் 0.05 மில்லிவிநாடிகள் குறைந்துள்ளதாகக் கண்டறிந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி, இதுவரை பதிவானதிலேயே மிகவும் குறுகிய நீளம் கொண்ட நாளாகப் பதிவானது. அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றி முடிக்க வழக்கத்தைவிடச் சற்று குறைவான நேரத்தையே எடுத்துக்கொண்டது.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், அன்றைய நாளின் நீளம், 24 மணிநேரத்தில் இருந்து 1.34 மில்லிவிநாடிகள் குறைவாக இருந்தது.

பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்பதே இதன் பொருள். 0.05 மில்லிவிநாடிகள், 1.34 மில்லிவிநாடிகள் போன்றவை கேட்பதற்கு மிகச் சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால், இது நாம் எதிர்பாராத பல வகைகளில் நம் மீது தாக்கம் செலுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

By admin