• Wed. Aug 13th, 2025

24×7 Live News

Apdin News

பூமி சூடாவதால் நமது சிந்தனை, நினைவாற்றல் பாதிக்கப்படுமா?

Byadmin

Aug 13, 2025


பூமியின் வெப்பநிலை, காலநிலை மாற்றம், உடல்நலம், டிராவெட் சிண்டரோம்

பட மூலாதாரம், Serenity Strull/ Getty Images

காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகள் மேலும் தீவிரமடைவதால், நமது மூளை செயல்படும் விதத்தை அதீத வெப்பம் எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

ஜேக்கிற்கு ஐந்து மாதங்கள் ஆகியிருந்தபோது முதல் டானிக்-குளோனிக் வலிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவரது சிறிய உடல் விறைத்து, பின் விரைவாக துடித்தது.

அவரது தாயார் ஸ்டெஃபனி ஸ்மித்தின் கூற்றுப்படி, “அப்போது உடல் மிகவும் சூடாக இருந்தது, அவனது உடல் அதிக வெப்பமடைந்திருந்தது. வாழ்க்கையில் இதை விட பயங்கரமான ஒரு காட்சியைப் பார்க்கவே முடியாது என அந்தக் கணத்தில் நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, அதோடு நிற்கவில்லை.”

வெப்பம் நிறைந்த வானிலை நிலவும்போது, வலிப்பு அடிக்கடி ஏற்பட்டது. வெப்பமான, ஈரப்பதமான கோடைகால நாட்கள் வந்தவுடன் பல்வேறு குளிர்விக்கும் நுட்பங்களை குடும்பத்தினர் பயன்படுத்துவார்கள். மேலும் அந்த வலிப்புகளைத் தடுக்க ஒரு கடினமான போராட்டம் தொடங்கும்.

By admin