படக்குறிப்பு, சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் டிராக்டரில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பெங்களூருவில் கனமழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பல இடங்களிலும் சாலைகளில் முழங்கால் ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் வேலைக்குச் செல்பவர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி பணிமனையை இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேருந்துகளை வெளியில் எடுக்க முடியாத நிலையில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெள்ளநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளின் கழுகுப் பார்வை புகைப்படம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளை மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து மக்கள் தங்களில் உடைமைகளை வேறு இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வாகனங்களில் வெளியேறி வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் மீட்கப்பட்டனர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாநில பேரிடர் மீட்பு படையினர் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாலையில் சூழ்ந்துள்ள வெள்ளநீரில் மக்கள் தங்களின் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் சாலைகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெள்ளத்தின் நடுவே அத்தியாவசிய பொருட்களுடன் குடியிருப்புகளை காலி செய்யும் மக்கள்