• Sat. Aug 30th, 2025

24×7 Live News

Apdin News

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவை முன்னிட்டு அடையாறு பகுதியில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் | Traffic changes in Adyar area for 4 days

Byadmin

Aug 30, 2025


சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்​கண்ணி ஆலய பொன்​விழா ஆண்​டுப் பெரு​விழா கொடி ஏற்​றத்​துடன் நேற்று (ஆக.29) தொடங்​கியது. செப்​. 8-ம் தேதி வரை இத்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இதில், ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்க உள்​ளனர். பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் மக்கள் நடைபயண​மாக வந்த வண்​ணம் உள்​ளனர்.

இதையடுத்​து, போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்​கும் வகை​யில் அடை​யாறு மற்​றும் பெசன்ட் நகர் பகு​தி​களில் போக்​கு​வரத்​தில் சில மாற்​றங்​களை போலீ​ஸார் மேற்​கொண்​டுள்​ளனர். கூட்ட நெரிசலைப் பொருத்து நாளை (ஆக.31) மற்​றும் செப்​.1, 7, 8 ஆகிய தேதி​களில் கீழ்​க்கண்ட பகு​தி​களில் போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக போக்​கு​வரத்து போலீ​ஸார் அறி​வித்துள்ளனர்.

அதன் விவரம் வரு​மாறு:திரு.​வி.க. பாலத்​திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழி​யாக பெசன்ட் நகர் பேருந்து நிலை​யம் நோக்கிச் செல்​லும் வாக​னங்​கள் ஆவின் பூங்​கா​வில் இருந்து தடை விதிக்​கப்​பட்​டு, அதற்​குப் பதிலாக எல்​.பி.​சாலை வழி​யாக செல்ல அனு​மதி அளிக்​கப்​படும். 7-வது அவென்யு மற்​றும் எம்​.ஜி.​சாலை சந்​திப்​பிலிருந்து அன்னை வேளாங்​கண்ணி தேவால​யம் நோக்கி வாக​னங்​கள் செல்ல அனு​ம​திக்​கப்​ப​டாது.

எம்​.எல். பூங்​கா​விலிருந்து பெசன்ட் அவென்யூ வழி​யாக பெசன்ட் நகர் பேருந்து நிலை​யத்தை நோக்​கிச் செல்​லும் மாநகர பேருந்​துகள் தடை செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், எல்​.பி. சாலை இடது பக்​கம் திரும்பி சாஸ்​திரி நகர் 1-வது அவென்யூ வழி​யாக வலது பக்​கம் திரும்பி சாஸ்​திரி நகர் 1-வது பிர​தான சாலை​யில் இடது பக்​கம் திரும்​பி, பின்​னர் எம்​.ஜி. சாலை வழி​யாக இடதுபக்​கம் திரும்பி பெசன்ட் நகர் 1-வது பிர​தான சாலை வழி​யாக பேருந்து நிலை​யத்தை அடைய​லாம்.

பெசன்ட் நகர் பேருந்து நிலை​யத்​திலிருந்து திரு​வான்​மியூர் மற்​றும் அடை​யாறு சிக்​னல் நோக்கி செல்​லும் மாநகர பேருந்​துகள் பெசன்ட் நகர் 1-வது அவென்​யு, சாஸ்​திரி நகர் 1-வது அவென்யு வழி​யாகத் திருப்பிவிடப்​பட்​டு, பின்​னர் இடதுபுறம் சாஸ்​திரி நகர் 1-வது மெயின் ரோடு வழி​யாக சென்​று, பின்​னர் வலதுபுறம் திரும்பி எம்.ஜி.​சாலை வழி​யாக எல்​.பி. சாலையை அடைந்து தங்​கள் இலக்கை அடைய வேண்​டும்​. இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.



By admin