• Tue. Aug 26th, 2025

24×7 Live News

Apdin News

பெட்ரோலியத்திற்கு மாற்றா “வெள்ளை ஹைட்ரஜன்” : பில் கேட்ஸ் நிறுவனத்தின் திட்டம் என்ன?

Byadmin

Aug 26, 2025


பிரேசிலில் காணப்படும் "தேவதை வட்டங்கள்" என அழைக்கப்படும் வட்டங்கள், உயர் அழுத்த இயற்கை ஹைட்ரஜன் நிலத்தை உயர்த்தி பின்னர் தாழ்த்தும்போது உருவாகின்றன.

பட மூலாதாரம், Alain Prinzhofer

படக்குறிப்பு,

இயற்கையாக உருவாகும் “வெள்ளை ஹைட்ரஜன்” பூமிக்கு கீழே பரந்த நிலத்தடி தேக்கங்களில் உள்ளது.

இப்போது சுத்தமான ஆற்றலுக்கான தங்க வேட்டை தொடங்கியுள்ளது.

1859ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் டைட்டஸ்வில்லில், தொழிலதிபர் எட்வின் டிரேக் ஒரு நிலத்தடி நீர்த்தேக்கத்தில் எண்ணெய் (கருப்பு தங்கம்) இருப்பதை கண்டுபிடித்தார். எண்ணையைத் தேடும் அவரது முயற்சியில், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்திருந்தனர். ஆனால், அந்தக் கண்டுபிடிப்பு, எண்ணெய் தேடலில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியது.

இப்போது, புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்கள், டைட்டஸ்வில்லில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட தருணத்தைப் போலவே, ஒரு புதிய ஆற்றல் மூலத்தை உருவாக்கும் நோக்கில், பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தேடுவது புதைபடிவ எரிபொருட்கள் அல்ல.

By admin