• Sat. Dec 13th, 2025

24×7 Live News

Apdin News

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் உயர் நீதிமன்றத்தின் அவமரியாதை கருத்துக்களைச் சாடிய உச்சநீதிமன்றம்

Byadmin

Dec 13, 2025


உச்சநீதிமன்றத்தின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் பொருத்தமற்ற கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றங்கள் வெளியிடும் சில கருத்துகள் பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் கருத்து தெரிவித்துள்ளது.

உடலை நேரடியாகத் தொடாவிட்டால் பாலியல் துன்புறுத்தலாகக் கருத முடியாது என்று ஒரு உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சிறுமிகள் தங்கள் “பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மற்றொரு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மற்றொரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு பெண்ணை ‘சட்டவிரோத மனைவி’, ‘நம்பிக்கையற்ற துணை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகைய கருத்துகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. பெண்களின் கண்ணியம் குறித்துச் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று அது தெளிவுபடுத்தியது.

By admin