• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

பெண்களை அவதூறாக வர்ணித்த அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Byadmin

Nov 26, 2025


பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமாரவிடம் வலியுறுத்துமாறு புதிய ஜனநாயக முன்னணி எம்.பி  சாமர சம்பத் தசநாயக்க  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான  நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் பேசுகையில்,

பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும்? எனவே பெண்களை வர்ணிக்கும்  அமைச்சர்களை  உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமாரவிடம் அரசின் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும். எமது  கட்சியில் இவ்வாறு யாரேனும் நடந்து கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்குவோம் .

தற்போது மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விடுத்து எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு  கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் நடப்பதை  மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது.இல்லையேல், ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு வந்து உரையாற்ற வேண்டும் .

இது குறித்து, ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

By admin