• Thu. Feb 5th, 2026

24×7 Live News

Apdin News

பெண்களை ரகசியமாக படம்பிடித்து ஆதாயம் தேடும் ஆண்கள் – பிபிசி புலனாய்வில் வெளியான உண்மை

Byadmin

Feb 5, 2026


பிபிசி நடத்திய ஒரு விசாரணையில், ஆண்கள் இரவு நேரங்களில் பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிப் பணம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இந்த வீடியோக்கள் பெரும்பாலும் “வாக்கிங் டூர்ஸ்” அல்லது “நைட் லைஃப் கன்டென்ட்” என்ற பெயரில் யூடியூப், டிக்டோக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படுகின்றன.

பிபிசி நடத்திய புலனாய்வில், ஆண்கள் சிலர் இரவு நேரங்களில் பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுத்து, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிப் பணம் சம்பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் பெரும்பாலும் “வாக்கிங் டூர்ஸ்” அல்லது “நைட் லைஃப் கன்டென்ட்” என்ற பெயரில் யூடியூப், டிக்டோக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படுகின்றன.

இந்த வீடியோக்கள் முழுவதும் முழங்கால் வரை உள்ள ஆடைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்திருக்கும் பெண்களையே குறிவைக்கின்றன. பல வீடியோக்கள் பெண்களின் பின்னால் இருந்தோ அல்லது தாழ்வான கோணத்திலோ எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு வீடியோ எடுக்கப்பட்ட சுமார் 50 பெண்களை பிபிசி குழுவினர் கண்டுபிடித்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது என்பதை பிபிசி கண்டறிந்தது. இது குறித்து அறிந்தபோது அவர்கள் அச்சத்தையும் அவமான உணர்வையும் வெளிப்படுத்தினர்.

தன்னுடைய ஸ்கர்ட்டுக்கு அடியில் தாழ்வான கோணத்தில் வீடியோ எடுக்கப்பட்டதை அறிந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கூறுகையில், தனது அனுமதியின்றி இந்த வீடியோ பதிவேற்றப்பட்டதைப் பார்த்ததில் இருந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தார். இப்போது வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் தனக்கு ஒரு வித பயம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

By admin