• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

பெண்கள் அதிகம் அழுவது ஏன்? மூன்று வகையான கண்ணீர் பற்றி தெரியுமா? ஒரு அறிவியல் பார்வை

Byadmin

Jan 21, 2026


மனிதன் அழுவது ஏன்? அறிவியல்

பட மூலாதாரம், Getty Images

நாம் வருத்தமாக, உணர்ச்சிவசப்பட்ட நிலை, கோபம் அல்லது மகிழ்ச்சியாக இருந்தால்கூட அழுகிறோம்.

ஆனால், உணர்வுப்பூர்வமாக கண்ணீர்விடும் ஒரே உயிரினம் மனிதன் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

பல விலங்குகள் தன்னுடைய குட்டிகளுக்கு ஆபத்து குறித்து சமிக்ஞை செய்வதற்காக பெரிதும் சத்தம் எழுப்பி அழும், ஆனால் அவற்றிடம் சிக்கலான உணர்வுப்பூர்வ தருணங்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக கண்ணீரை தூண்டுவதற்கான மூளை பாதைகள் இல்லை.

கண்ணீர் எப்படி உருவாகிறது என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டாலும் மனிதர்கள் ஏன் அழுகின்றனர், உணர்ச்சிவசப்படுவதால் வரும் அழுகையின் நோக்கம் என்ன என்பது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படவில்லை.

கண்ணீர் என்பது என்ன?

“சளி (mucus), எலெக்ட்ரோலைட், தண்ணீர், புரதங்கள் மற்றும் லிப்பிடுகள் (கொழுப்பு) ஆகிய 5 கூறுகள் சேர்ந்தே கண்ணீர் உருவாகிறது,” என ஸ்விட்சர்லாந்தில் உள்ள மனித உயிரியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளர் (postdoctoral fellow) மேரி பேனியெர்-ஹெலாவுவே விளக்குகிறார்.

By admin