• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

பெண்கள் விளையாட்டு பற்றிய பிபிசி ஆய்வு தமிழ்நாடு பற்றி ஒருசேர உணர்த்தும் இரு விஷயங்கள் என்ன?

Byadmin

Mar 22, 2026


கிரிக்கெட்டுக்கு ஈடாக கபடிக்கு முன்னுரிமை தரும் தமிழக பெண்கள் – பிபிசி ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்திய பெண்கள் விளையாட்டைப் பார்க்கும் விதத்தில் ஓர் அமைதியான, ஆனால் முக்கியமான மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது.

விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும், மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்போரின் எண்ணிக்கையும், அதை ஒரு தொழில்வாய்ப்பாகக் கருதும் மனப்போக்கும் அதிகரித்து வருவதாக பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வு கூறுகிறது.

ஆனால், இந்த முன்னேற்றக் கதையின் நடுவில் ஒரு சிக்கலான உண்மையும் பொதிந்துள்ளது. பெண்கள் விளையாட்டுத் துறைக்குள் வந்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார்களா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. இந்த முரண்பாடு மிகவும் தெளிவாகத் தெரியும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.

இந்த ஆய்வு 2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 30 வரை, 14 மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1,155 பேரின் பதில்கள் இந்த ஆய்வுக்காகப் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆய்வு, ‘முழு இந்தியா’வையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங்கள் குறித்தான மனப்போக்குகள், பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இது நடத்தப்பட்டது. எனவே, இதை ஒரு தேசிய அளவிலான சூழலின் முடிவு எனக் கருதாமல், சமூக மாற்றத்திற்கான திசையைப் பற்றிச் சுட்டிக்காட்டும் வழிகாட்டியாகக் கருத வேண்டும்.

By admin