0
பான் இந்திய நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் தயாராகி வரும் ‘பெத்தி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தற்போது இலங்கையில் முகாமிட்டுள்ளார்.
இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ எனும் திரைப்படத்தில் ராம்சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை புயல் ‘ஏ .ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படக்குழு தற்போது இலங்கையில் முகாமிட்டுள்ளது. இதில் படத்தின் நாயகன் ராம் சரணும், படத்தின் நாயகியும் பொலிவுட் நடிகையுமான ஜான்விகபூர் ஆகியோர் பங்குபற்றி இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.