வீட்டின் சுவர்களில்
புகைப்படங்கள் இல்லை
தெருக்களில் சிலைகள் இல்லை
பள்ளிப் புத்தங்களிலும்
மறைக்கப்பட்டது பெயர்
படை நடத்தி
வெற்றிகள் நிறைத்த மண்ணில்
எந்த தடயமும் இல்லை
உமைப் பற்றியெந்த காவியமும் இல்லை
உம் பெயர் போலொரு காவியமும் இல்லை
உம் பெயரை உச்சரிக்க
தடை செய்யப்பட்ட காலத்தில்
பெயரே வரலாறு
நிகரற்ற சித்திரம்
கர்ஜிக்கும் அடையாளம்
நம்மை சூழும் காவல்
பகைவர் அஞ்சும் ஆயுதம்
மனங்களில் ஒலிக்கும் பெருங்குரல்
நம் நிலத்தே அதிரும் வீரநடை
வானில் அசையும் கொடி
இதயங்களில் சுடரும் ஒளி
காலத்தை சூழற்றும்
உம் மந்திரப்புன்னகை
மொழியினிற் சுமப்பது
தேசத்தை மட்டுமல்ல
நம் தலைவனையும்தான்.
தீபச்செல்வன்
The post பெயரெனும் காவியம் | தீபச்செல்வன் appeared first on Vanakkam London.