• Sat. Jan 11th, 2025

24×7 Live News

Apdin News

பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து – பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா?

Byadmin

Jan 11, 2025


சீமான், பெரியார்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா?

கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சீமான் என்ன பேசினார்?

அந்தச் செய்தியாளர் சந்திப்பில், “தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி – பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?” என சீமான் பேசினார்.

மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார்.

By admin