0
எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது? பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உங்களுக்கும், (பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வியை நோக்கி) விடயங்களை தெரியாமல் மேசையை தட்டும் உங்களின் நண்பர்களுக்கும் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன். அமைச்சர் வசந்த சமரசிங்க தொழிசங்க சந்திப்பின் போது எம்முடன் கலந்துக் கொண்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தில் முடிந்தால் 10 ரூபாவையேனும் அதிகரிக்கமுடியுமா என்று ஜனாதிபதியிடம் தெளிவாக குறிப்பிட்டேன்.
ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1750 ரூபாய் வழங்கப்படும், 200 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்படும் அதற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.
எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது. தோட்ட கம்பனியே அதனை தீர்மானிக்க வேண்டும். தொழில் வழங்கல் நாட்கள் மாற்றமடையலாம்.
பெருந்தோட்ட கம்பனிகள் 200 ரூபா வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகளின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை ‘ ஒரு ரூபாய் கூட அதிகரிக்க போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதாயின் அதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன்.
வீர வசனம் பேசலாம் ஆனால் நடைமுறையில் அவற்றை செயற்படுத்த முடியாது. பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என்றார்.
—