15
கிளாஸ்கோ சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடம் பெரும் தீ விபத்தால் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தின் மிகவும் பரபரப்பான இந்த ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களால் இந்த நிலையம் “அடுத்த அறிவிப்பு வரும் வரை” மூடப்பட்டே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முழுவதும் கிளாஸ்கோ சென்ட்ரல் நிலையத்தின் மேல் தளங்களுக்கு எந்த ரயிலும் வரவோ செல்லவோ செய்யாது.
கீழ்தளங்களிலும் ரயில்கள் நிற்காது; ஆனால் அவை நிலையத்தை கடந்து அருகிலுள்ள ஆர்கைல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் மற்றும் ஆண்டர்ஸ்டன் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
சில சேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட மாற்று பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்காட்ரெயில் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கான புதுப்பிப்புகள் சமூக ஊடகம், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Avanti West Coast நிறுவனம், பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை கூடுதல் கட்டணமின்றி LNER சேவைகளில் எடின்பர்க் மற்றும் இலண்டன் கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையம் இடையே பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும் டிரான்ஸ்பெனைன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்கும் லிவர்பூல் லைம் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் மற்றும் மான்செஸ்டர் விமான நிலைய ரயில் நிலையம் இடையேயான சேவைகளும் திங்கட்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் First Bus Greater Glasgow நிறுவனம் பல பேருந்து சேவைகளிலும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளது.