• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

பெலிகாட்: கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற தந்தை மீது குற்றச்சாட்டை பதிவு செய்த மகள்

Byadmin

Mar 7, 2025


கேரோலின் டரியன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிசெல் பெலிகாட்டின் மகளான கேரோலின் டரியன் தனது தந்தை டாமினிக் தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்

  • எழுதியவர், லாரா கோஸி
  • பதவி, பிபிசி நியூஸ்

டொமினிக் மற்றும் கிசெல் பெலிகாட் மகளான கேரோலின் டரியன், தனது தந்தை தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டை அவர் தந்தை மறுத்துள்ளார்.

தனது முன்னாள் மனைவி கிசெலுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக போதை மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பல டஜன் ஆண்களை வரவழைத்து அவரை வன்கொடுமை செய்ய வைத்ததற்காக டொமினிக் பெலிகாட்டிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தனது மனைவி வன்கொடுமை செய்யப்படுவதை படம்பிடித்து, நூற்றுக்கணக்கான வீடியோக்களை பட்டியலிட்டு ஹார்டு டிஸ்கில் சேமித்து வைத்தார். அதில் அவரது மகளின் இரண்டு புகைப்படங்களும் இருந்தன. அந்த புகைப்படங்களில் தற்போது 46 வயதான டரியன் நினைவில்லாமல், தனக்கு அடையாளம் தெரியாத உள்ளாடைகளை அணிந்துகொண்டு மயங்கிய நிலையில் இருந்ததாக கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த புகைப்படங்களுக்கு டொமினிக் பெலிகாட் முன்னுக்கு பின் முரணான விளக்கங்களை அளித்துள்ளார். ஆனால் தனது மகளை பாலியல் ரீதியதாக துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை எப்போதும் மறுத்து வந்திருக்கிறார்.

By admin