1
ரஷ்யா-உக்ரைன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அமெரிக்க தூதர்களுடன் நடத்திய உரையாடல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சாதகமான கருத்தினை வழங்கியுள்ளார்.
வியாழக்கிழமை ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருடனான சந்திப்பு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது, “உண்மையான அமைதியை எவ்வாறு நெருக்கமாகக் கொண்டுவருவது என்பது குறித்த புதிய யோசனை” முன்வைக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
புளோரிடாவில் அமெரிக்க மற்றும் உக்ரைன் தூதர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அமைதித் திட்டத்தின் விவரங்களை வழங்கிய ஒரு நாளுக்கு பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “மற்றும் முழு டிரம்ப் குடும்பத்தினருக்கும்” கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அனுப்புமாறுகேட்டுக் கொண்டதாக ஜெலென்ஸ்கி கூறினார்.