• Wed. May 21st, 2025

24×7 Live News

Apdin News

பேராசிரியர் அலி கானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் – நிபந்தனைகள் என்ன?

Byadmin

May 21, 2025


பேராசிரியர் அலி கானுக்கு இடைக்கால ஜாமீன்

பட மூலாதாரம், Prof. Ali Khan Mahmudabad

படக்குறிப்பு, பேராசிரியர் அலி கான்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் கர்னல் சோபியா குரேஷி. விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட பேராசிரியர் அலி கான் மஹ்மூதாபாத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மே 18-ஆம் தேதி பேராசிரியர் அலி கான் ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

யோகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹரியானாவின் சோனிபட் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இரண்டு சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் பேராசிரியர் அலி கான் மீது ஹரியானா காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?

இந்த விஷயத்தில் ​​உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குகையில், “ஆட்சேபனைக்குரியதாகக் கூறப்படும் இரண்டு ஆன்லைன் பதிவுகளின் உள்ளடக்கங்களை நாங்கள் பரிசீலித்தோம். இந்த மனுக்கள் காரணமாக, மனுதாரர்கள் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்.-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கின் விசாரணையை நிறுத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இருப்பினும், ஆன்லைன் பதிவுகளில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளின் பயன்பாட்டையும் சரியான விளக்கத்தையும் புரிந்து கொள்ள, ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு ஹரியானா காவல்துறை டிஜிபியை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.” என்று கூறிப்பிட்டுள்ளது.

By admin