• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் | thagaisal thamizhar virudhu for kader mohideen

Byadmin

Aug 16, 2025


சென்னை: இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனுக்கு தகை​சால் தமிழர் விருதை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். பல்​வேறு துறை​களில் சாதனை புரிந்​தவர்​களுக்கு அப்​துல் கலாம், கல்​பனா சாவ்லா விருதுகளை​யும் வழங்​கி​னார்.

சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், இந்த ஆண்​டுக்​கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். அந்த வகை​யில், ‘தகை​சால் தமிழர்’ விருதை இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனுக்கு வழங்​கி​னார். ரூ.10 லட்​சம் விருதுத் தொகை, சான்​றிதழும் வழங்​கப்​பட்​டது.

இஸ்ரோ தலை​வர் நாராயணனுக்கு டாக்​டர் ஏபிஜே.அப்​துல் கலாம் விருதும், துளசிமதி முரு​கேசனுக்கு துணிவு, சாகச செயலுக்​கான கல்​பனா சாவ்லா விருதும் வழங்​கப்​பட்​டன. விருதுடன் தலா ரூ.5 லட்​சம் பரிசுத்​ தொகை, பதக்​க​மும் வழங்​கப்​பட்​டது.

நல்​ஆளுமை விருது: பின்​னர், பல்​வேறு பிரிவு​களில் நல்​ஆளுமை விருதுகள் வழங்​கப்​பட்​டன. சமு​தாய பங்​கேற்பு மூலம் மாற்​றத்தை கொண்​டு​வரும் ஊரக மேம்​பாட்டு முயற்​சிகள் பிரி​வில் உதவி காவல் கண்​காணிப்​பாளர் வி.பிரசன்ன குமார், வட்​டாட்​சி​யர் ப.பால​கிருஷ்ணன், வட்​டார வளர்ச்சி அலு​வலர் வீ.ய​முனா விருது பெற்​றனர்.


சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் விருதுகள் பெற்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கட்​டிட வரைபட அனு​ம​தியை எளி​தாக்​கிய பிரி​வில் வீட்​டு​வச​தி, நகர்ப்​புற வளர்ச்​சித் துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்க இயக்​குநர் பா.கணேசன், ஆதி​தி​ரா​விடர், பழங்​குடி​யினர் நலத் துறை​யின் திட்​டங்​களை செயல்​படுத்​திய பிரி​வில் துறை செயலர் க.லஷ்மி பிரி​யா, ஆதி​தி​ரா​விடர் நல ஆணை​யர் த.ஆனந்த், பழங்​குடி​யினர் நலத் துறை இயக்​குநர் ச.அண்​ணா துரை, தாட்கோ இயக்​குநர் க.சு.கந்​த​சாமிக்​கும் முதல்​வரின் நல்​ஆளுமை விருது (குழு) வழங்​கப்​பட்​டது.

கன்​னி​யாகுமரி​யில் விவே​கானந்​தர் பாறை நினை​விடம் – திரு​வள்​ளுவர் சிலையை இணைக்​கும் கண்​ணாடி பாலத்தை அமைத்​ததற்​காக நெடுஞ்​சாலைத் துறை செயலர் இரா.செல்​வ​ராஜ், தமிழ் மொழியை உலக அளவில் மேம்பட முயற்சி எடுத்த தமிழ் இணை​யக் கல்வி கழகத்​தின் இணை இயக்​குநர் ஆர்​.கோமகன் ஆகியோ​ருக்கு நல் ஆளுமை விருதை (அமைப்​பு) முதல்​வர் வழங்​கி​னார்.


சுதந்திர தினத்தையொட்டி, தலைமைச் செயலக கோட்டை முகப்பில் நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாற்​றுத் திற​னாளி​களுக்கு சிறப்​பான சேவை புரிந்த வகை​யில் திருச்சி குமர​வேல் சண்​முகசுந்​தரத்​துக்கு சிறந்த மருத்​து​வர் விருது, எக்​காம்​வெல் மறு​வாழ்வு மையத்​துக்கு சிறந்த நிறு​வனம் விருது, கோவை குணசேகரன் ஜெகதீசனுக்கு சிறந்த சமூக பணி​யாளர் விருது, பெல் பிரின்ட்​டர்ஸ் நிறு​வனத்​துக்கு மாற்​றுத் திற​னாளி​களை அதிக அளவில் பணி அமர்த்​தி​யதற்​கான விருது ஆகிய​வற்றை முதல்​வர் வழங்​கினர்.

மகளிர் நலனுக்​காக சிறப்​பாக தொண்டு புரிந்​தவர்​களுக்​கான விருதுகள் பிரி​வில், சென்னை பாகீரதி ராமமூர்த்​தி, விருதுநகர் மாவட்​டம் க.மாரி​முத்து ஆகியோ​ருக்கு சிறந்த சமூக சேவகர் விருது, சென்னை கருணாலயா சமூக சேவை நிறு​வனம், திருச்சி சொசைட்டி ஃபார் எஜுகேஷன் வில்​லேஜ் ஆக்​‌ஷன் & இம்ப்​ரூவ்​மென்ட் நிறு​வனத்​துக்கு சிறந்த தொண்டு நிறு​வனத்​துக்​கான விருது வழங்​கப்​பட்​டது.


விழா நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள்,அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

தொடர்ந்​து, சிறந்த உள்​ளாட்​சிகளுக்​கான முதல்​வர் விருதுகள் வழங்​கப்​பட்​டன. சென்னை மாநக​ராட்​சி​யின் சிறந்த மண்​டலம் என்ற பிரி​வில் 6-வது, 13-வது மண்​டலங்​களுக்கு முதல் மற்​றும் 2-வது பரிசு வழங்​கப்​பட்​டது. சிறந்த மாநக​ராட்சி பிரி​வில் ஆவடி, நாமக்​கலுக்கு முதல் மற்​றும் 2-வது பரிசு வழங்​கப்​பட்​டது.

சிறந்த நகராட்​சிகளாக ராஜ​பாளை​யம், ராமேசுவரம், பெரம்​பலூர், சிறந்த பேரூ​ராட்​சிகளாக உத்​திரமேரூர், காட்​டுப்​புத்​தூர், நத்​தத்​துக்கு முதல் 3 பரிசுகள் வழங்​கப்​பட்​டன. முதல்​வரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்​கள் பிரி​வில் விழுப்​புரம் சந்​துரு​கு​மார், திருநெல்​வேலி ஜெயக்​கு​மார், சேலம் மாரியப்​பன், பெண்​கள் பிரி​வில் சென்னை காஜி​மா, புதுக்​கோட்டை லாவண்​யா, கிருஷ்ணகிரி கவுரி ஆகியோர்​ விருது பெற்​றனர்​. பின்​னர்​, முதல்​வருடன்​ விரு​தாளர்​கள்​ குழு புகைப்​படம்​ எடுத்​துக்​ கொண்​டனர்​.



By admin